For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெர்மாக்கோல் சம்பவத்தை வைத்து தமிழக அரசை சீண்டிய கமல்

தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணை ஆற்றின் நீரை ஆவியாகமல் இருக்க தெர்மாகோல் மூலம் தடுக்க திட்டம்போட்டு செய்தனர். ஆனால் அந்த திட்டம் வெற்றி அடையவில்லை.

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: தெர்மாக்கோல் விவகாரத்தை வைத்து அரசை கேலி செய்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

இயக்குநர் அட்லி தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'சங்கிலி புங்கிலி கதவத்தொற' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.

Thermocol: Kamal Hassan tease Tamilnadu government

கமல் பேசுகையில், உங்களுக்கு முன்பே இப்படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன். இப்போதெல்லாம், யார் முதலில் படத்தை பார்ப்பது என சினிமா ரசிகர்கள் பெருமைக் கொள்கிறார்கள். அதனால்தான் என்னவோ பைரசி அதிகமாக வருகிறது.

டிரைலரை பார்த்தபோது படம் நன்றாக இருக்கும்போ இருந்தது. இந்த படம் ஆவி வந்த கதை. ஆனால் நல்லபடியாக பண்ணியுள்ளார்கள். வெல் கவர்ட், நாட் வித் தெர்மாகோல். தப்பா சொல்லிட்டேனோ.. ஆவின்னதும் அது உடனே ஞாபகம் வருகிறது என்றார்.

இதனால் அரங்கத்தில் பலத்த கரவொலியும், சிரிப்பலையும் எழுந்தது. தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு வைகை அணை ஆற்றின் நீரை ஆவியாகமல் இருக்க தெர்மாகோல் மூலம் தடுக்க திட்டம்போட்டு செய்தனர். ஆனால் அந்த திட்டம் வெற்றி அடையவில்லை. இந்த நிலையில் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமலஹாசன் இவ்வாறு கேலி செய்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக அரசை பல சந்தர்ப்பங்களில் விமர்சனம் செய்துள்ளார் கமல். சமீபமாக சில நாட்களாக கருத்து கூறாமல் இருந்து வந்தார். தற்போது தெர்மாக்கோலை வைத்து அரசை கேலி செய்துள்ளார் கமல்ஹாசன்.

English summary
Actor Kamal Hassan teased Tamilnadu government with thermocol issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X