தூத்துக்குடி: 25 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவர்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் 25ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்து தங்களின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1982ம் ஆண்டு முதல் 89ம் ஆண்டுவரை ஒரே வகுப்பில் இணைந்து பிளஸ் டூ வரை படித்த நண்பர்கள் 25ஆண்டுகளுக்கு பின்பு இன்று சந்தித்தனர்.
இதற்கான சந்திப்பு விழா தூத்துக்குடி டி.எஸ்.எப் ஹோட்டலில் நடந்தது.
விழாவிற்கு பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்கள் பாக்யராஜ், ராஜசேகரன் தலைமை வகித்தனர். மாணவ நண்பர்களான தொழில்அதிபர் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, ராஜேஷ்திலக், கப்பல் கேப்டன் சிவராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பங்கேற்ற நண்பர்கள் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த 17ஆசிரியர்களையும் வரவழைத்து கவுரவித்தனர்.
முதுமையால் மரணம் அடைந்த தங்களின் ஆசிரியர்களின் மறைவிற்கு இரங்கல் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து நண்பர்கள் ஒவ்வொருவரும் தங்களின் இன்றைய வாழ்க்கை, வேலை, குடும்ப உறவுகள், கடந்தகால நட்பின் மலரும் நினைவுகளை எல்லாம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்களான செந்தில்ராஜன், சாம்ராஜ், அருண்பிரகாஷ், சாமுவேல்பெனட், ஆனந்த்டிவோட்டா ஆகியோர் செய்திருந்தனர்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications