வருவாங்க... வருவாங்க.. எங்க போயிடப் போறாங்க! - தினகரன் குரூப்பின் அசால்ட் நம்பிக்கை!!
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக உள்ள அனைவரும் விரைவில் தினகரனுக்கு ஆதரவாக வருவார்கள் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வமும் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தினகரனுக்கு ஆதரவாகவும் 19 எம்எல்ஏக்கள் வெளிப்படையாக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மேலும் 20 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளதாகவும், அவர்கள் நேரம் வரும்போது வெளிப்படையாக தினகரனை ஆதரிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

புதுவையில்...
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் புதுவையில் ஒரு ரிசார்ட்டில் தங்கி 'ஓய்வெடுத்து' வருகின்றனர். சென்னையில் தொந்தரவு அதிகம் என்பதால் இந்த ரிசார்ட்டில் தங்கி இருப்பதாகத் தெரிவித்தனர்.

மேலும் எம்எல்ஏக்கள்
இவர்களுக்கு தலைமை தாங்கும் தங்க தமிழ்ச்செல்வன் எம்எல்ஏ, மேலும் பல எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வருவார்கள் என்று கூறி வருகிறார்.

வருவாங்க வருவாங்க
"அந்தப் பக்கம் இருக்கும் பல எம்எல்ஏக்கள் எங்கள் அணிக்கு நிச்சயம் வருவார்கள். எங்கே போய்விடப் போகிறார்கள்... தினகரன் பக்கம் நியாயமிருக்கிறது... இந்தக் கட்சியை அவரால் மட்டும்தான் கட்டிக் காக்க முடியும்... துரோகிகளுடன் கை கோர்த்திருக்கும் இந்த அரசின் தலைமையை மாற்ற வேண்டும்," என்று தங்க தமிழச்செல்வன் கூறியுள்ளார்.

அடுத்து பெங்களூரா?
புதுவையில் தங்கியுள்ள தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும், அங்கிருந்து பெங்களூருக்குச் செல்லக்கூடும் என்கிறார்கள்.
-
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications