விவசாயிகளை பாதிக்காமல் மாற்று வழியில் கெயில் திட்டம்: கருணாநிதி யோசனை
சென்னை: விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில் கெயில் திட்டத்தை மாற்றுவழியில் மேற்கொள்ள வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் கெயில் நிறுவனம் குழாய்களைப் பதிப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அந்தக் குழாய்கள் விளை நிலங்களையும், விவசாயிகளையும் பாதிக்காமல் பதிக்கப்பட வேண்டுமென்று தொடக்கத்திலிருந்து கூறி வருகிறோம்.

தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக எரிவாயுக் குழாய்களைப் பதித்து, திட்டத்தைச் செயல்படுத்துமாறு 2013ஆம் ஆண்டு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கெயில் நிறுவனம் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதித்தது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு தற்போது உச்ச நீதிமன்றம் "கெயில் நிறுவனத்திற்குத் தடை விதித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது. தமிழகத்தில் கெயில் நிறுவனம் உத்தேசித்த எரிவாயு திட்டத்தை விவசாய நிலங்களின் வழியாகவே செயல்படுத்தலாம்" என்று உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காரணமாக தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரும் விவசாயிகளும் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். எனவே இந்த நிலையில், தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து "சீராய்வு" மனு தாக்கல் செய்தோ, அல்லது விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதகமும் ஏற்படாத வகையில், அனைத்துத் தரப்பினரிடமும் கலந்து பேசியோ ஒரு சுமூக முடிவு காண்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications