2 பெண்களை ஏமாற்றிவிட்டு 3வது திருமணம் செய்ய முயன்ற மன்மத ராசா.. மன்மத ராசா!
தூத்துக்குடி: சொந்த ஊர் பெயரை மாற்றி 2 பெண்களை திருமணம் செய்த வாலிபர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றபோது சிக்கினார். அந்த நபரின் முதல் இரண்டு மனைவிகளே போலீசில் புகார் அளித்து மாமியார் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
சென்னை எழும்பூர் புதுப்பேட்டையை சேர்ந்தவர் மகேஸ்வரி. பெற்றோரை இழந்த இவர் உறவினர் பராமரிப்பில் இருந்தார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்தார். அப்போது அங்கு ஸ்டோர் மேனேஜராக பணிபுரிந்த தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்த அரவிந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்தார்.
கடந்த 2012ம் ஆண்டு அரவிந்த் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மங்காடு கோயிலில் வைத்து மகேஸ்வரியை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில நாட்களிலேயே அவர் தனது பெயர், வயது உள்ளிட்ட உண்மையான விபரங்களை மறைத்து திருமணம் செய்தது மகேஸ்வரிக்கு தெரிய வந்தது. இருப்பினு்ம் சமாதானம் அடைந்த அவர் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் தனது கணவர் லேப்டாப்பை அவர் திறந்து பார்த்தபோது மும்பை தாதார் நகரை சேர்ந்த நிர்மலா என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் நிர்மலாவை தொடர்பு கொண்டு வரவழைத்து விபரங்களை தெரிந்து கொண்டார். மேலும் முதல் திருமணத்த மறைந்த தன்னை இரண்டாவது திருமணம் செய்தது குறித்து தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து அரவிந்த் என்ற சங்கரநாராயணை கைது செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இவர் பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடியுள்ளார். தன்னை காதலிக்க மறுத்த பெண்ணை பிளேடால் அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார். புழல் சிறையில் பிரீத்தி என்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இது தொடர்பாக சைதாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் மிஸ்டுகால் மூலம் பழக்கமான பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயல்வதாக தெரிய வந்ததால் போலீசில் புகார் கொடுத்து அவரை கைது செய்ய வைத்தோம் என்று தெரிவித்தனர்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications