ஜெ. விடுதலைக் கோரி... அ.தி.மு.க. நகர்மன்ற பெண் தலைவர் தலைமையில் மொட்டை போட்ட 100 பேர்
திருச்செங்கோடு: அதிமுகப் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுதலை செய்யக் கோரி திருச்செங்கோடு நகர்மன்றத் தலைவர் பொன்சரஸ்வதி உட்பட நூறுக்கும் அதிகமான அதிமுக தொண்டர்கள் மொட்டை அடித்துக் கொண்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரி அதிமுகவினரும், மற்ற துறையினரும் பலவிதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதில் ஒரு கட்டமாக திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் பொன்சரஸ்வதி, நகர செயலாளர் மனோகரன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் இன்று மொட்டை அடித்துக் கொண்டனர்.
திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரர் மலைக் கோவிலுக்கு கீழ் பகுதியில் உள்ள ஆறுமுகசாமி கோவிலில் அவர்கள் மொட்டை அடித்தனர். அதேபோல அ.தி.மு.க. தொண்டர் சைக்கிள் வடிவேல் என்பவர் இன்று மொட்டையடித்து விட்டு அர்த்தநாரீசுவரர் கோவிலில் உள்ள 1200 படிக்கட்டுகளையும் முட்டி போட்டு ஏறினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications