ஆயா வேலைக்குக் கூட காசு.. ஊழல் ஜாம்பவான்களை எதிர்த்து வரலாறு படைப்போம்: திருமா
ஈரோடு: தமிழகத்தில் ஆயா வேலைக்கு கூட பணம் கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விட்டனர். இந்த நிலையை மாற்றி புதிய வரலாறு படைப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சிவகிரி பேருந்துநிலையம் அருகில் மக்கள் நலக்கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-

பெண்களின் கண்ணீர்...
சாராயக் கடையை மூடுங்கள் என பெண்கள் கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள். யார் அழிந்தால் என்ன என்று அக்கறை அற்றவர்களின் கையில் ஆட்சி இருக்கிறது.

ஆயா வேலைக்கும் பணம்...
ஆயா வேலை, சமையலர் வேலை, கண்டக்டர் வேலைக்குக்கூட பணம் கொடுத்தால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டனர்.

மக்கள் மனநிலை...
திமுக, அதிமுக பலம் தெரியாமல் நாங்கள் இல்லை. தெரிந்துதான் நாங்கள் இணைந்திருக்கிறோம். மக்கள் மனநிலையை உணர்ந்து நாங்கள் சேர்ந்திருக்கிறோம். தொகுதியை, வாக்கைப் பகிர்ந்து கொள்வதற்காக கூட்டணி அமைக்கிறார்கள்.

புதிய வரலாறு...
மக்கள் நலக்கூட்டணி தமிழகத்தில் புதிய வரலாறு படைக்கப் போகிறது. இவ்வளவு காலம் ஒற்றையா, இரட்டையா என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தனர். மாற்றை முன்வைக்கவில்லை. ஊழலை ஒழிக்கும் தகுதி இந்த அணித் தலைவர்களுக்குத்தான் உண்டு!

அக்னி பரீட்சை...
இது ஒரு அக்னி பரீட்சைதான். எதிரே நிற்போர் ஊழல் ஜாம்பவான்கள். ஆனால் நாங்கள் மக்கள் பலம், கொள்கை பலத்தை நம்பி களத்தில் நிற்கிறோம். நம்மால் அவர்களை வீழ்த்த முடியும்" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications