அவர்களே கல்வீசி அடித்துக் கொள்கிறார்கள்.. திருமா. குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

Thiruma slams PMK for lodging false charges against them
சிதம்பரம்: அரசியல் ஆதாயத்திற்காக பாமகவினரே கல்வீசிக் கொண்டு நாடமாடுகிறார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன கூறியுள்ளார்.

சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசினார் திருமாவளவன். அப்போது அவர் கூறுகையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தற்போதைய கருத்து கணிப்புபடி தி.மு.க.வுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

தமிழகத்தில் மோடி அலை வீசுவதாக சொல்கிறார்கள். ஆனால் அது மாய அலை. தேர்தலுக்கு பின்னர் உண்மை நிலை தெரியவரும்.

தமிழகத்தில் 5 முனை போட்டி நிலவி வந்தாலும் உண்மையான போட்டி தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க.வுக்கும் தான்.

தருமபுரியில் அன்புமணி மீதான கல்வீச்சு சம்பவத்தையடுத்து அவர் விடுதலை சிறுத்தைகள் மீது வீண்பழி சுமத்துகிறார். அந்த சம்பவத்துக்கும், எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

திட்டமிட்டு ஒரு சமுதாய மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பார்க்கிறது பா.ம.க. அவர்களே கல்வீசி கொண்டு அனுதாபம் ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவதாக ஒரு சிலர் கூறுவது உண்மைதான் என்று தோன்றுகிறது.

விடுதலை சிறுத்தை கட்சி மோதிரம் சின்னம் வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுள்ளோம். நான் எம்.பி.யாக உள்ளதால் அந்த சின்னத்தை ஒதுக்க முன்னுரிமை அளிப்பதாக தேர்தல் கமிஷன் உறுதி அளித்துள்ளது என்றார் திருமாவளவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+