சென்னையில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய திருமாவளவன் கைது
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னையில் மறியலில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.
சென்னை: டெல்லியில் 21 நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
வள்ளுவர் கோட்டம் அருகே விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து திருமாவளவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகள், மாணவர் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயி கள் நாள்தோறும் பல்வேறு நூதன போராட்டங் களில் ஈடுபட்டு வருகின்றனர். சங்கு ஊதி போராட்டம், எலிக்கறி, பாம்புகறி உண்ணும் போராட்டம் என இதுவரை பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. 21வது நாளான இன்று விவசாயிகள் பாதி மொட்டையடித்து பாதி மீசையை எடுத்தும் போராட்டம் நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கங்கள் அழைப்பு விடுத்தனர். இதற்கு அனைத்து அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாளவன் தலைமையில் ஏராளமானோர் வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய திருமாவளவன், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications