தலித் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் இயற்ற மோடி உறுதியளிக்க வேண்டும்: திருமாவளவன்
தலித் வன்கொடுமைகளுக்கு எதிராக மோடி சட்டம் இயற்ற திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை: தலித் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டம் இயற்ற மோடி உறுதியளிக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கச்சநத்தம் கிராமத்தில் 3 பேர் வெட்டி கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கி உள்ளனர். ஆனால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், காயம்பட்டவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதியும் வழங்க வேண்டும். பழையனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் மட்டும் போதாது. அவர்கள் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலித்துகளுக்கு வன்கொடுமை பாதுகாப்பு சட்டம் .கடுமையாக இருந்தவரை அவர்களுக்கு எதிரான தாக்குதலும் குறைந்திருந்தது. ஆனால், தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பால் அது நீர்த்துப் போய் உள்ளது. மோடி அரசு இதற்கு மாற்றாக கடுமையான சட்டம் இயற்றும் என பாஜக தலித் தலைவர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வருகின்றது. அது நிறைவேற மோடி உறுதியளிக்க வேண்டும்.
தூத்துக்குடியில் போராடிய மக்களை சமூக விரோதிகள் என கூறியது ,யார் சமுக விரோதிகள் என ரஜினிகாந்த் தெளிவுபடுத்த வேண்டும். உரிமைக்காக-போராடும் மக்களை கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது சமுக. விரோதிகள் என கூறுவது.
இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications