பாஜக விரிப்பது பாசவலை அல்ல... சதி வலை.. உஷார்.. ரஜினிக்கு திருமாவளவன் எச்சரிக்கை
பாஜக விரிக்கும் வலை பாசவலை அல்ல. அது சதி வலை என்று ரஜினிக்கு விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதே வேளையில் பாஜக தலைவர்கள் அனைவரும் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

பாஜகவில் இணைய..
இதுகுறித்து திருமாவளவன் பேசிய போது, பாஜக போன்ற வகுப்பு வாத கட்சிகளுடன் உறவு வைத்துள்ளார் ரஜினி என்றும், அவர் விரைவில் அந்தக் கட்சியில் இணையப் போகிறார் என்றும் பலர் விவாதிக்கின்றனர். இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது என்று தெரிய வில்லை என்று திருமாவளவன் கூறினார்.

அமித்ஷா அழைப்பு
பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா ரஜினிகாந்த்திற்காக கதவு திறந்தே வைத்திருப்பதாக கூறியுள்ளார். ரஜினிகாந்த் தனது தனித்தன்மையை விட்டு கொடுக்காமல் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.

சதி வலை
பாஜக தலைவர் அழைப்பது பாசவலை அல்ல. சதி வலை என்பதை ரஜினிகாந்த் புரிந்து கொள்ள வேண்டும். ரஜினி உஷாராக இருப்பது நல்லது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

லைகா நிகழ்ச்சி எச்சரிக்கை
ஏற்கனவே, இலங்கையில் லைகா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு ரஜினி போகக் கூடாது. அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் நிகழ்ச்சிக்கு செல்வதால் ரஜினிக்கு கெட்டப் பெயர் ஏற்படும் என்று திருமாவளவன் எச்சரித்தார். அதனைத் தொடர்ந்து பலரும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்தனர். அதனை ஏற்று ரஜினி இலங்கைக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று திருமாவளவனின் பாஜக குறித்த எச்சரிக்கையை இப்போது ஏற்பாரா ரஜினி?
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications