கருணாநிதி குறித்த வைகோ சர்ச்சை பேச்சு: ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன் எதிர்ப்பு
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்து பேசியுள்ளதற்தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னையில் உள்ள மதிமுக கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கருணாநிதி குறித்து வைகோ கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.

இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தேமுதிகவில் பிளவை ஏற்படுத்தும் திமுகவின் முயற்சி மக்கள் நலக் கூட்டணிக்கு எதிரானது என்று குற்றம்சாட்டினார்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளது குறித்து தனிநபர் விமர்சனத்தில் தமக்கு உடன்பாடில்லை என்றும் ஒருவரை ஜாதி ரீதியாக விமர்சிப்பது தேவையற்ற செயல் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஜாதி ரீதியாக திமுக தலைவர் கருணாநிதி பற்றி பேசியதற்கு வைகோ மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications