ஜாதி சார்பற்ற அரசியல் நடத்துவோம் என்ற சசிகலா அறிவிப்புக்கு வரவேற்பு: திருமாவளவன்
பெண்ணுரிமைக்கான இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என்பதால் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள, சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலராக பொறுப்பேற்ற சசிகலாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
போயஸ் கார்டனுக்கு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சசிகலாவை நேரில் சந்தித்தார். அப்போது பொதுச்செயலராக பொறுப்பேற்றதற்கு சசிகலாவுக்கு வாழ்த்துகளை திருமாவளவன் தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன். சசிகலாவுடனான சந்திப்பை தேர்தலுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஜெயலலிதாவிற்கு பிறகு துணிந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டதை வரவேற்கின்றோம். அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது.
பெண்ணுரிமைக்கான இயக்கம் விடுதலை சிறுத்தைகள் என்பதால் அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள, சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்தேன். தமிழகத்தில் ஜாதி சார்பற்ற அரசியலை நடத்துவோம் என சசிகலா உறுதி அளித்ததை வரவேற்கிறோம். இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
அதிமுகவின் பொதுச் செயலாளரும், முதல்வரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அக்கட்சி மீது ஜாதி முத்திரை விழுந்துள்ளது. இதை நீக்க விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் ஆதரவு கட்சியுடன் இணைந்து நடைபோடுவது நல்லது என்பது சசிகலா திட்டம் என கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications