பெரியாரின் சிலையை அகற்ற எச். ராஜாவின் முப்பாட்டனாலும் முடியாது- திருமாவளவன்
பெரியாரின் சிலையை அகற்ற எச்.ராஜாவின் முப்பாட்டனாலும் முடியாது என்று திருமாவளவன் தெரிவித்தார்.
Recommended Video

சென்னை: பெரியாரின் சிலையை அகற்ற எச்.ராஜாவின் முப்பாட்டனாலும் முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சிகளின் ஆட்சி முடிந்தவுடன் அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது. அதுபோல் ஒரு நாள் தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சியும் முடிவுக்கு வரும்போது பெரியார் சிலை அகற்றப்படும் என்ற அர்த்தத்தில் ஒரு பேஸ்புக் பதிவை போட்ட எச்.ராஜா தற்போது நீக்கியுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறுகையில் லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில். இன்று திரிபுராவில் லெனின் சிலை , நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமியின் சிலை என்று கூறியுள்ளார்.
இதற்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து திருமாவளவன் கூறுகையில் பெரியாரின் சிலையை அகற்ற எச்.ராஜாவின் முப்பாட்டனாலும் முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications