ராம்குமார் மரணத்தில் அரசு யாரையோ காப்பாற்றுகிறது... திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை: ராம்குமார் மரணத்தில் தமிழக அரசு யாரையோ காப்பாற்றுகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
புழல் சிறையில் இருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ராம்குமார் கைது செய்ததில் இருந்து சுவாதி கொலை குறித்தும் ராம்குமார் கைது குறித்தும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார் திருமாவளவன். தற்போது ராம்குமார் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரி வருகிறார்.

இந்நிலையில், ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தங்களது மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று ராம்குமாரின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கு உறுதி துணையாய் திருமாவளவன் இருந்து செயல்பட்டு வருகிறார். ராம்குமாரின் பிரேத பரிசோதனை 2வது முறையாக தள்ளி வைக்கப்பட்டதற்கு பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்து திருமாவளவன் பேசியதாவது:
ராம்குமார் தந்தை செய்திருந்த மனு மீதான விசாரணையில் இரண்டு நீதிபதிகளுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் ராம்குமாரின் பிரேத பரிசோதனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் சம்பத், ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும் என்ற எங்களது வாதத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எங்களுக்கு அரசு மருத்துவர்கள் இருப்பதில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. அதே நேரத்தில் அரசு மருத்துவர்கள் அரசு சார்ந்துதான் செயல்படுவார்கள் என்பதால் தனியார் மருத்துவர் ஒருவரும் உடன் இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். ஆனால் இதனை ஏற்க அரசு தரப்பு வழக்கறிஞர் மறுத்துவிட்டார்.
இந்த வழக்கல் தமிழக அரசின் வாதம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சுவாதி கொலையில் விசாரிப்பதற்காக அழைத்து செல்லப்பட்ட ராம்குமார் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்திருக்கிறார். பிரேத பரிசோதனை முறையாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை தமிழக அரசு ஏற்க மறுப்பதை பார்த்தால் இந்த வழக்கில் தொடர்புடைய யாரையோ அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது. எதையோ மூடி மறைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. ஆனால் ராம்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை என்பதை வெளி கொண்டு வரும் வரை சட்ட ரீதியான எங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications