'விடுதலைப் புலி' முத்திரை குத்தி வைகோவுக்கு மலேசியா தடை- திருநாவுக்கரசர் கண்டனம்

விடுதலைப் புலி என கூறி மலேசியாவுக்குள் நுழைய வைகோவுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு தமிழக காங். கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என கூறி மலேசியாவில் நுழைய வைகோவுக்கு தடை விதித்ததற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமியின் இல்ல திருமணத்தில் கலந்து கொள்ள வைகோ அந்நாட்டுக்கு சென்றார். கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைகோவை மலேசிய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

Thirunavukkarasar condemns Malaysiya ban to vaiko entry

வைகோ ஒரு இலங்கை குடிமகன் என்றும் அவர் மீது இலங்கையில் வழக்குகள் உள்ளன எனவும் பொய்க் குற்றச்சாட்டை சுமத்தினர். அத்துடன் மலேசியாவுக்கு ஆபத்தானவர்கள் என்ற பட்டியலில் வைகோவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த வைகோ, தாம் இந்திய குடிமகன் என கூறி வாதிட்டார். ஆனால் வைகோவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த மலேசிய அதிகாரிகள் இன்று இரவு அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புகின்றனர். மலேசியாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் வெளியுறவுத்துறை தலையிட்டு தீர்வுகாண வேண்டும் எனவும் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+