ஸ்டாலினுடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு.. நலம் விசாரிக்க வந்ததாக தகவல்!
ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார் திருநாவுக்கரசர்.
சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்து பேசினார். அவர் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்ததாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் டெல்லியிருந்து சென்னை திரும்பிய திருநாவுக்கரசர், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது தேர்தலில் தன் கட்சியின் நிலைப்பாடு குறித்து தெளிவாக சொல்லி இருந்தார்.
[ கருணாசை லேசுல நினைத்துவிடாதீர்கள்.. செம பிளான்ல இருக்காரு! ]

விரைவில் சந்திப்பு என தகவல்
அப்போது பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று ஸ்டாலின் தெளிவாக சொல்லி இருக்கிறார் என்றும், எனவே திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் கூறினார். மேலும் வரப்போகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவும் காங்கிரஸ் கட்சி தயாராகவே இருப்பதாகவும், அதற்காக விரைவில் ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாகவும் உறுதிபட கூறியிருந்தார்.

கூட்டணி குறித்த பேச்சு?
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினை திருநாவுக்கரசர் நேரில் சந்தித்து பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் உள்ள ஸ்டாலினின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அதற்கான துவக்க முடிவு செய்யப்படும் என்றும் முன்னதாக கூறப்பட்டது.

அரசியல் நிலவரம்
சந்திப்பு முடிந்ததும் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சமீபத்தில் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். அதுகுறித்து நலம் விசாரிக்க வந்தேன். இதுதவிர்த்து பொதுவான அரசியல் நிலவரம் குறித்து பேசினோம். 18 எம்எல்ஏக்கள் குறித்த தீர்ப்பு உள்ளிட்டவை குறித்துப் பேசினோம்.

டைம் இருக்கிறது
தொகுதிப் பங்கீடு குறித்து பேச வேண்டிய அவசியம் இப்போது இல்லை. அதற்கெல்லாம் டைம் இருக்கிறது. அப்போதுதான் பேசுவோம். நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்புள்ளது. எதிர்பார்க்கலாம்" என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications