திமுகவுடன் தொடருமா கூட்டணி? 61 மாவட்ட காங். தலைவர்களுடன் திருநாவுக்கரசர் ஆலோசனை #congress
சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விலகக் கூடும் என கூறப்பட்டு வரும் நிலையில் 61 மாவட்ட தலைவர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று ஆலோசனை நடத்தினார்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றிவிட்டு தமிழ் மாநில காங்கிரஸை சேர்க்க விரும்பியது ஸ்டாலின் தரப்பு. ஆனால் கனிமொழி தரப்போ காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்தது. இதற்கு திமுக தலைவர்கருணாநிதியும் ஆதரவு தெரிவித்திருந்தார்.

அதிருப்தியில் காங்.
இதனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்து வருகிறது. ஆனாலும் உள்ளாட்சி தேர்தலில் மிகவும் சொற்ப இடங்களைத்தான் காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கியது. இதில் காங்கிரஸ் கடும் அதிருப்தி அடைந்தது.

ராகுல் வருகை
இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரிக்க ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தந்தது திமுக- காங்கிரஸ் உறவில் உச்சகட்ட விரிசலை ஏற்படுத்தியது. மேலும் ஜெயலலிதா உடநலம் தொடர்பான திமுகவின் கோரிக்கைகள் அனைத்துக்குமே திருநாவுக்கரசர் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

ஆலோசனை
இதனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுடன் காங்கிரஸ் கை கோர்க்கும் எனக் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று 61 மாவட்ட தலைவர்களுடன் திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி...
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுகவுடனான கூட்டணி, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!











Click it and Unblock the Notifications