ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு மையம்.. கிராமப்புற மாணவனுக்கு ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை மீது உள்ள பள்ளியில் அமைந்த நீட் தேர்வு மையத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த கிராமப்புற மாணவனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து கொண்டு தேர்வு மையத்தில் இறக்கிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Recommended Video
நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள். கடந்த ஆண்டு நடத்தப்பட வேண்டிய இந்த தேர்வு கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வு மையங்களை தேசிய தேர்வு முகமை அதிகரித்திருந்தது. நேற்று மதியம் 2 மணிக்கு நடைபெற்ற தேர்வு 5 மணிக்கு முடிவடைந்தது.

நீட் தேர்வு வேண்டாம்
தேர்வு முடித்துவிட்டு வந்த மாணவர்கள் கூறுகையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு, கொரோனா பரவல், தேர்வு அச்சம், மருத்துவ கனவு என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் அவர்கள் தேர்வு எழுதினர்.

நீட் தேர்வு மையம்
இந்த நிலையில் ஏலகிரி மலை மீது உள்ள பள்ளியில் அமைந்துள்ள நீட் தேர்வு மையத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த கிராமத்து மாணவனை தனது காரில் அழைத்து சென்று மாணவனை பத்திரமாக மையத்தில் சேர்த்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நீட் தேர்வுக்கு தயார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன் என்ற மாணவர். இவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவருக்கு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி கிராமத்தில் இருந்து ஏலகிரி மலை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கப்பட்டது.

திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர்
இதையடுத்து அந்த மாணவன் திருவண்ணாமலையிலிருந்து கிளம்பி திருப்பத்தூர் சென்றார். அங்கு ஏலகிரி சென்ற மாணவனுக்கு மலை பகுதியில் உள்ள பள்ளி செல்ல வழி தெரியாமல் அவதிப்பட்டார். அப்போது அவ்வழியே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா காரில் சென்று கொண்டிருந்தார்.

காரில் அழைத்து சென்ற ஆட்சியர்
இந்த மாணவர் தன்னந்தனியாக நின்று கொண்டு எல்லோரிடமும் பள்ளி முகவரி கேட்டதை அறிந்து வேடியப்பனிடம் விசாரித்தார். அப்போது அவர் ஏலகிரி மலை மீதுள்ள பள்ளிக்கு நீட் தேர்வு எழுத செல்வதாகவும் அதற்கு வழி தெரியாமல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த மாணவரை தனது காரில் ஏற்றிச் சென்று தேர்வுக்கு அனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் கோரிக்கை
ஏலகிரி மலையில் டான்போஸ்கோ மையத்தில் இந்த மாணவன் தேர்வு எழுத உதவிய ஆட்சியரை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் தேர்வுக்கு 1.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதால் அந்த மாணவனை உரிய நேரத்தில் தேர்வு மையத்தில் கொண்டு சேர்த்த சம்பவம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இது போன்ற முக்கிய தேர்வுகளின் போது அந்தந்த மாநில அரசுகள் சிறப்பு பேருந்துகளை இயக்கினால் இது போல் மாணவர்கள் அலைச்சல் குறையும். ஒருவேளை அந்த ஆட்சியர் உரிய நேரத்தில் வந்திருக்காவிட்டால், அந்த மாணவன் தேர்வு எழுத முடியாத நிலை கூட உருவாகியிருக்கலாம். மேலும் மாணவர்களின் வசிப்பிடம் உள்ள மாவட்டத்திலேயே தேர்வு மையங்களை ஒதுக்கினால் அவர்களும் சிரமப்படாமல் தேர்வு எழுத ஏதுவாக இருக்கும் என்பதே அனைத்து தரப்பினரின் கோரிக்கையாகும்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications