செங்கல் அறுக்கும் எந்திரத்தில் லுங்கி சிக்கி தொழிலாளி பலி: திருவள்ளூர் அருகே சோகம்
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: ஆவடி அருகே செங்கல் அறுக்கும் எந்திரத்தில் லுங்கி சிக்கியதில், தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ளது அரக்கம்பாக்கம். இங்குள்ள தனியார் செங்கல் சூளையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிராமனிக் தேத்ரடா என்பவரும், அவரது மனைவி சுபத்ராவும் கடந்த 6 மாதங்களாக கூலித் தொழிலாளிகளாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை செங்கல் சூளையில், பிராமனிக் தேத்ரடா லுங்கி அணிந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் அணிந்திருந்த லுங்கி, செங்கல் அறுக்கும் எந்திரத்தின் உள்பகுதியில் சிக்கி, அவரையும் இழுத்தது. இதில் படுகாயமடைந்த பிராமனிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்கல் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.











Click it and Unblock the Notifications