திருவண்ணாமலை தீப விழாவுக்கு 2,100 சிறப்பு பேருந்துகள், 12 சிறப்பு ரயில்கள் இயக்க முடிவு !
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு 2,100 சிறப்புப் பேருந்துகள், 12 சிறப்பு ரயில்கள் இயக்க நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விவரிசையாக வருகிற 25-ந் தேதி நடைபெறுகிறது. தீபத் திருவிழாவைக் காண வரும் பக்தர்களின் நலன் கருதி தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு 2,100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சென்னை, விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு 24, 25-ந் தேதிகளில் 12 சிறப்பு ரயில்கள் இயக்க ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி கிடைத்துவிடும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு நவம்பர் 23, தீபத் திருவிழா நடைபெறும் 25 ஆகிய 2 நாள்களில் திருவண்ணாமலை நகரைச் சுற்றியுள்ள 23 டாஸ்மாக் மதுக் கடைகளும் மூடப்படும் என்று ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications