டிஜிபியே ஒன்னும் செய்யமுடியல.. ஓடி போயிட்டன்னு சொல்லிடுவோம்.. மாணவியை மிரட்டிய பேராசிரியைகள்!
திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவியை அக்கல்லூரி பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருவண்ணாமலை: வேளாண் கல்லூரி மாணவியை அக்கல்லூரி பேராசிரியைகள் மிரட்டும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்தார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி விவகாரம் ஆளுநர் வரை சென்றது.
இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார் நிர்மலா தேவியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
விடுதி வார்டன்கள்
இந்நிலையில் நிர்மலாதேவி போலவே திருவண்ணாமலை வேளாண் கல்லூரி பேராசிரியைகளும் இதே வேலையை செய்துள்ளனர். அந்த ஆடியோக்கள் வைரலாகி வருகின்றன. கல்லூரி பேராசிரியைகள் புனிதா, மைதிலி இருவரும் விடுதி வார்டன்களாகவும் உள்ளனர்.

தங்கபாண்டியன் டார்ச்சர்
சென்னையை சேர்ந்த இளம்பெண் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாமாண்டு படித்து வருகிறார். விடுதியில் தங்கி படிக்கும் இந்த மாணவிக்கு உதவி பேராசியர் தங்கபாண்டியன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அவரு பேச்சை கேள்
இதுதொடர்பாக விடுதி வார்டன்களிடம் புகார் அளித்தார் மாணவி. ஆனால் வார்டன்களாகவும் உள்ள பேராசிரியைகள் புனிதா மற்றும் மைதிலி மாணவியை உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.

தவறான பாதை
தங்கபாண்டியனின் ஆசையை நிறைவேற்றினால் உன் வாழ்க்கை செட்டிலாகிவிடும் என்றும், அவர் சொல்வதுபோல் கேட்டு நடந்து கொள் என்றும் கூறி மாணவியை தவறான பாதைக்கு செல்ல வற்புறுத்துகின்றனர்.

ஓடிப்போயிவிட்டாய்..
மறுத்தால் உன்வாழ்க்கைதான் நாசமாகும் என்றும் உனக்கு எதிராக கொடுக்க எல்லா ஆதாரங்களும் என்னிடம் உள்ளது என்றும் உன் பெற்றோர் வந்து கேட்டால் நீ இங்கு வரவேயில்லை. எங்கோ ஓடிப்போயிவிட்டாய் என்று கூறிவிடுவோம்.

டிஜிபியே ஒன்னும் முடியல
பெரிய டிஜிபியே ஒன்றும் செய்ய முடியவில்லை என அந்த மாணவியை மிரட்டுகின்றனர். தற்போது இந்த ஆடியோ வைரலாகியுள்ளது. மாணவியை பேராசிரியைகளே உதவி பேராசிரியரின் இச்சைக்கு இணங்க வற்புறுத்துவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications