மேட்டருக்கு மேல் மேட்டர்.. போட்டுத் தாக்கும் தமிழர்கள்.. "அவங்களுக்கு" ஹேப்பிதான்!
சென்னை: இசை படத்தில் வருவது போலத்தான் இப்போது தமிழகத்திலும் காட்சிகள் விரிந்து கொண்டிருக்கின்றன. பக்காவாக மக்களை குழப்பி வருகிறார்கள்.. அதை விட தமிழக மக்களே தங்களையும் அறியாமல் திசை திரும்பிப் போய் விட்டனர். இதுதான் வேதனையாக இருக்கிறது.
சில வாரங்களுக்கு முன்பு வரை ஒட்டுமொத்த தமிழகமும் சென்னை வெள்ளத்தைப் பற்றியே சிந்தித்தது. அதைப் பற்றியே பேசியது. ஆனால் இன்று சென்னையின் ஈரம் கூட காயாத நிலையில் ஒட்டுமொத்தமாக அத்தனை பேரும் திசை திரும்பி விட்டனர்.

இதையே இந்த வாட்ஸ் ஆப் செய்தியும் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அந்த செய்தியைப் பாருங்கள்..
- சிம்பு மேட்டரால் தமிழன் மறந்த விஷயங்கள்....!
- ஸ்டிக்கர் மேட்டரை மறந்தாச்சு..
- வெள்ள நிவாரணத்தில் அரசின் செயல்பாடை மறந்தாச்சு....
- செம்பரப்பாக்கம் ஏரி விவகாரத்தை மறந்தாச்சு....
- ஏன் இன்னும் படுபாதாளத்தில் இருக்கும் கடலூரில் மக்களின் அவல நிலையை மறந்தாச்சு...
- மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஒரு வெள்ள சேதமே ஏற்படவில்லை என்ற நிலையை உருவாக்கியாச்சு....
- சிம்புவை #பகடை காயாக வைத்து தமிழனின் தலையில் #மிளகாயை அரைச்சாச்சு....
- ஆஹா தமிழா நமக்கு நிகர் நம் தமிழினமே
- ஒன்றுக்கும் உப்புக்கு ஆகாத சிம்பு விவகாரத்திலே நம்முடைய நாட்டின் நிலைமையே நமக்கு மறந்து போச்சே...
- இன்னும் எவ்வளவு நாள் ஆனாலும் நம் #இளிச்சவாயர்களே....
- தமிழ் வாழ்க... தமிழன் வாழ்க...!
- இந்த வரிசையில் லேட்டஸ்டாக வந்து சேர்ந்துள்ளது விஜயகாந்த்தின் த்தூ.. பேச்சு. இதை வைத்து மக்கள் மிகப் பெரிய அளவில் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு அவர்களது எதிர்பார்ப்பு பூர்த்தியாகி விட்டது. சமூக வலைதளங்களில் பலரும் இதே வேலையாகத்தான் உள்ளனர். எப்படியோ நல்லபடியாக அத்தனை பிரச்சினைகளையும் திசை திருப்பியாகி விட்டது என்ற சந்தோஷத்தில் "உரியவர்கள்" நிச்சயம் இருப்பார்கள்.
உண்மையில் இந்த நிகழ்வுகள் எல்லாம் "அவங்களுக்கு"த்தான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.. இதையெல்லாம் பார்க்கும்போது "சூனா பானா" வடிவேலு காமெடிக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது!
-
ஹென்றியும் சொல்லிட்டாரு.. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உடனே இதை செய்யுங்க! தமிழக அரசுக்கு கோரிக்கை -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications