கிராபிக்ஸ் வழியாக பேஷனில் நுழைந்து "அன்டர் வாட்டர்" போட்டோகிராபியில் கலக்கும் கேரளத்து ரிச்சர்ட்!
சென்னை: கிராபிக்ஸ் டிசைனராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் பேஷன் டிசைனராக மாறி இப்போது பேஷன் போட்டோகிராபராக, அதுவும் அண்டர் வாட்டர் போட்டோகிராபராக கலக்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆண்டனி.
கேரளாவில் அண்டர் வாட்டர் போட்டோகிராபியில் இவர் தான் இன்று கோலோச்சி வருகிறாராம். திருமண புகைப்படங்களையும் இவர் அண்டர் வாட்டர் போட்டோகிராப் மூலம் எடுத்து அசத்தி வருகிறார்.
கொச்சியைச் சேர்ந்த ரிச்சர்ட், பேஷன் புகைப்படக்கலைஞராக இருந்தாலும் கூட திருமணங்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றையும் ஒரு கை பார்க்கிறார். அதிலும் திருமணத் தம்பதிகளை அண்டர் வாட்டர் புகைப்படங்களாக இவர் எடுத்துத் தள்ளும் விதம் அலாதியாக இருக்கிறது. புதுமணத் தம்பதிகளை புது விதமான கோணத்தில் பார்க்கும் போது பிரமிக்க வைக்கிறது.
இவரை புக் செய்து விட்டால் போதும், திருமணம் முடிந்ததும் 2 மணி நேரம் இவரிடம் செலவிட வேண்டி வரும். நீச்சல் குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் அங்கு வைத்து விதம் விதமாக புகைப்படம் எடுக்கிறார் ரிச்சர்ட். அதன் ரிசல்ட்.. சூப்பர்ப் என்று சொல்ல வைக்கும்.
அடிப்படையில் இவர் ஒரு ஊர் சுற்றி. ஊர் ஊராகப் போவது பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது. அதிலிருந்துதான் புகைப்படக்காரராக மாறினார். பின்னர் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு இன்று ஊர் போற்றும் புகைப்படக்கலைஞராக வலம் வருகிறார்.

தெருவில் கண்டதையெல்லாம் முன்பு புகைப்படம் எடுத்து தள்ளுவாராம். அது இவருக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்துள்ளது. சாதாரண கோணத்தில் எதையும் எடுக்க மாட்டாராம். யாருமே யோசிக்காத கோணத்தில் படம் எடுப்பதே இவரது ஸ்டைலாகும்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்புதான் இவர் அண்டர் வாட்டர் போட்டோகிராபியில் குதித்தார். இவரது நண்பர் ஒருவரது ஐடியாதான் இது. ஆரம்பத்தில் சிரமமாக இருந்ததாம். ஆனால் போகப் போக ஜாலியாகி விட்டாராம்.
இதுவரை கிட்டத்தட்ட 15க்கும் மேற்பட்ட அண்டர் வாட்டர் திருமண புகைப்பட ஆல்பத்தை உருவாக்கியுள்ளாராம். எல்லாமே வெகுவாக பாராட்டப்பட்டவையாகும்.
Underwater Photography
Posted by Richard Antony Photography on Sunday, April 5, 2015
கொஞ்சம் செலவு பிடிக்கும்தான்.. ஆனால் காலம் பூராவும் நமது திருமண நினைவுகளை ஈரமாக வைத்திருக்கும் என்பதால் பலரும் இப்போது இதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்துள்ளனராம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications