சிலரை அடையாளம் காட்டவே தினகரனுடன் சந்திப்பு நடைபெறுகிறதாம்... சொல்கிறார் தங்க தமிழ்ச்செல்வன்!
கட்சியில் உள்ள சிலரை அடையாளம் காட்டவே டிடிவி தினகரனுடன் சந்திப்பு நடைபெறுகிறது எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை: கட்சியில் உள்ள சிலரை அடையாளம் காட்டவே டிடிவி தினகரனுடன் சந்திப்பு நடைபெறுகிறது எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தினகரனை ஒதுங்கச் சொல்ல ஜெயக்குமாருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்றும் தங்க தமிழ்ச்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுகவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்டதை போல மீண்டும் பல புதிய அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றனர். அதிமுக 3 அணிகளாக உடைந்துள்ள நிலையில் சசிகலாவின் அக்காள் மகனும், அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளருமான டிடிவி தினகரனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இதுவரை 24 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனை சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். இதனால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தினகரனுக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவு மேலும் அதிகரிக்கும் என்று கூறினார். சிலரை அடையாளம் காட்டவே தினகரனுடன் இநத் சந்திப்பு நடைபெறுவதாக கூறினார்.
தினகரனை ஒதுங்கச் சொல்ல ஜெயக்குமாருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் எதன் அடிப்படையில் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார்? என்றும் தங்க தமிழ்ச்செல்வன் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications