காதிலும் 'அம்மா'.. கழுத்திலும் 'அம்மா'.. ஆர்.கே.நகரை வலம் வரும் 'அம்மம்மா' தொண்டர்!
சென்னை: தாமரைக்கனியை இந்தத் தலைமுறை ஞாபகத்தில் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை... ஆனால் அதிமுகவினரால் மறக்க முடியாத "ஃபிகர்" அவர். ஆனால் சென்னையில் தாமரைக்கனி ரேஞ்சுக்கு ஒரு பெண் தொண்டர் வலம் வருகிறார்.
தாமரைக்கனி எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசி என்றால் இந்தப் பெண், தீவிர ஜெயலலிதா விசுவாசியாக இருக்கிறார்.
தாமரைக்கனி மெகா சைஸ் மோதிரத்தை அணிந்திருப்பார். அதில் பிரமாண்டமான எம்.ஜி.ஆர் படம் இடம் பெற்றிருக்கும். அதை வைத்துத்தான், சட்டசபையில் ஒருமுறை சாத்தூர் ராமச்சந்திரனுக்கு முகத்தில் ஒரு குத்து விட்டார் தாமரைக்கனி.
இந்தப் பெண் தொண்டரோ காதில் போட்டுள்ள மெகா சைஸ் கம்மலில் ஜெயலலிதா சிரிக்கிறார். கழுத்திலும் தாலி போல பெரிய சைஸ் ஜெயலலிதா படம் பொறித்த டாலரை தொங்க விட்டுள்ளார் இப்பெண்.

எல்லா ஊர் பஞ்சாயத்திலும்
தென் சென்னையில் நடைபெறும் அதிமுக தொடர்பான அனைத்துக் கூட்டங்களிலும் இந்தப் பெண்ணை தவறாமல் பார்க்கலாம். ஆஜானுபாகுவாக இருக்கும் இப்பெண்ணின் காது, கழுத்து, கை நிறைய தங்க நகைகள் புரண்டு காணப்படும்.

வளர்மதி கூட்டங்களில் மிஸ் ஆக மாட்டார்
குறிப்பாக அமைச்சர் வளர்மதியின் கூட்டங்களில் இவரை கண்டிப்பாக பார்க்கலாம். வளர்மதிக்கு அருகிலோ அல்லது சற்றுத் தள்ளியோ நிச்சயம் இவர் இருப்பார்.

எவ்ளோ பெரிய டாலர்
இவரது கழுத்தில் மிகப் பெரிய சைசிலான ஜெயலலிதா படம் பொறித்த டாலரைப் பார்க்கலாம். அவரது உருவத்துக்குப் பொருத்தமாக பெரிய சைஸ் டாலர் இது. அதில் "அம்மா" படம் அமர்க்களமாக இடம் பெற்றிருக்கும்.

கை நிறைய தங்கம்
தாலிக்குத் தங்கம் தருகிறது ஜெயலலிதா அரசு. இந்தப் பெண்ணோ, நடமாடும் தங்கக் கடையாக ஜொலிக்கிறார். எந்த நிகழ்ச்சியானாலும் இவர் மட்டும் பளிச்சென தனித்து மின்னுவார்.

பால் குடம் தூக்கி
சமீபத்தில் ஜெயலலிதா விடுதலைக்காக சென்னையில் நடந்த அனைத்து விதமான பூஜை நிகழ்ச்சிகளிலும் இவரைத் தவறாமல் காண முடிந்தது. பால் குடம் தூக்கினார், அங்கப் பிரதட்சனம் செய்தார்.

கம்மலில் அம்மா
தற்போது ஆர்.கே. நகர் தொகுதியிலும் பிரசாரப் பணியில் ஈடுபட்டுள்ளார் இவர். இப்போது அனைவரையும் இவரது கம்மல்தான் கவர்ந்திழுக்கிறது. காரணம், பெரிய சைஸ் கம்மலில் ஜெயலலிதா படம் போட்டு அழகாக, எடுப்பாக காணப்படுவதுதான்.

இரட்டை இலையுடன் அம்மா
அவரது கம்மல் இரட்டை இலை சின்னம் தாங்கி நிற்க, அதன் மேல் பகுதியில் ஜெயலலிதா படம் டாலர் வடிவில் இடம் பெற்றிருந்தது. பிரசாரத்தை வேடிக்கை பார்க்க வந்தவர்கள் இந்தப் பெண்ணின் காதையே பார்த்து ஆச்சரியப்பட்டு நின்றதைக் காண முடிகிறது.

ஒவ்வொருவரும் ஒரு விதம்
ஒவ்வொரு தொண்டரும் விதம் விதமாக தங்களது ஜெயலலிதா விசுவாசத்தைக் காட்டுகின்றனர். இப்பெண்மணியோ இப்படி டிசைன் டிசைனாக நகை போட்டு அசத்துகிறார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications