ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு... பற்றி எரியும் வீடுகளால் பதற்றம்
ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஊழியர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால் தடியடி நடத்திய போலீசார் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். இன்னொருவரும் பலியானதாக செய்திகள் கூறுகின்றன.

கட்டுக்கடங்காத போராட்டம்
போராட்டம் கட்டுக்கடங்காமல் செல்வதால் வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

குடியிருப்புக்கு தீவைப்பு
இந்நிலையில் ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்த வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் ஸ்டெர்லைட் குடியிருப்புக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.
|
வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
இதனால் குடியிருப்புகள் பற்றி எரிவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தீ வைப்பு சம்பவத்தால் தூத்துக்குடி- நெல்லை 4 வழி சாலையில் கரும்புகை மூட்டம் நிலவி வருகிறது.

தீயணைப்புப் பணி தீவிரம்
இந்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். குடியிருப்புகளில் சிக்கியுள்ளவர்களும் வேகமாக மீட்கப்பட்டு வருகின்றனர். சேத விவரம் குறித்து இதுவரை தகவல் இல்லை.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications