ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு: தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
Recommended Video

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.
மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் இன்று பல்வேறு அமைப்புகள் மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இந்த மாவட்ட மக்கள் மற்றும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேதாந்தா குழுமம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கான முதற்கட்டப் பணிகளை துவங்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை அமைந்துள்ள குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தங்களின் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி பிப்ரவரி மாதம் முதல் பலகட்டங்களாக போராடி வருகின்றனர்.

இன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு தெரிவித்து கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 10,000 கடைகள், வணிக நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆலையை சுற்றிலும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி அளிக்கக் கூடாது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மக்களும், பல சமூக அமைப்புகளும் இணைந்து இன்று தூத்துக்குடியில் பேரணி மற்றும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடத்த உள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications