தூத்துக்குடிக்கே "தூக்கி" வாரிப்போட்டுடுச்சு.. "சும்மாதான் கொலை பண்ணோம்".. உறைஞ்சி போய் நின்ற போலீஸ்
தூத்துக்குடி: ஆடு மேய்க்கப்போன நபர், ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.. இந்த கொலைக்கு சம்பந்தமானவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் அருகேயுள்ளது மணக்கரை கீழுர்.. இங்கு வசித்து வருபவர் மணி.. 60 வயதாகிறது.. 2 மகன்கள், 4 மகள்கள் இருக்கிறார்கள்.. இவர்கள் எல்லாருக்குமே கல்யாணமாகிவிட்டது.

மணி, அந்த பகுதியிலேயே ஆடுகளை மேய்த்து வருபவர். இப்படித்தான், மணக்கரைக்கு பக்கத்திலுள்ள மாடசாமி கோயில் அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு, அங்கிருந்த ஒரு வேப்பரத்தின் அடியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.
இளைஞர்கள்: அப்போது, அதே ஊரை சேர்ந்த சில இளைஞர்கள், அங்கு கபடி விளையாடிக்கொண்டிருந்தனர்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் வானம் இருண்டுக்கொண்டு வந்தது. மழை வந்துவந்துவிடும் என்பதால், விளையாடிக்கொண்டிருந்த இளைஞர்கள், உடனே கிளம்பி வீடுகளுக்கு போய்விட்டார். ஆனால், மணி மட்டும் அசந்து தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென 2 பைக்குகள் 3 பேர் வந்தார்கள்.. தூங்கிக்கொண்டிருந்த மணியை, அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள்.. அதுவும் மணியின் தலையிலும், கழுத்திலும் மீண்டும் மீண்டும் வெட்டியிருக்கிறார்கள்.
ஆடு மேய்க்கும் மணி: அந்த வழியாக வந்த இன்னொரு ஆடு மேய்க்கும் நபர், கத்தி கூச்சலிடவும் அந்த கும்பல் அங்கிருந்து எகிறி தப்பியது.. ஆனால், மணி ரத்தவெள்ளத்தில் அங்கேயே உயிரிழந்தார். தகவலறிந்த முறப்பநாடு போலீஸார், விரைந்து வந்து மணியின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு, போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பிவைத்தனர். பிறகு, மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உடனடியாக கிளம்பி வந்து, சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
இதனிடையே, மணியின் உறவினர்கள் ஆவேசமானார்கள்.. குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரி, சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.. அவர்களிடம் போலீஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி தரவும், போராட்டம் கைவிடப்பட்டது.
வன்மம்: பொதுவாகவே, திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி, தூத்துக்குடி மாவட்டம் மணக்கரை போன்ற பகுதிகளில் தொடர்ந்து ஜாதிய வன்மத்தோடு படுகொலைகள் நடந்து வருவதால், இந்த சம்பவமும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கொலை செய்யப்பட்ட மணி, பட்டியலினத்தை சேர்ந்தவர்.. அவரை கொலைசெய்தவர்களோ, மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கிறார்கள்.. இதுவே இந்த சம்பவத்தில் மிகப்பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது..
விசாரணை: பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். மற்றொருபுறம், இதுகுறித்த விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டதுடன், இந்த வழக்கில் மணக்கரையை சேர்ந்த லட்சுமணன், சங்கரசுப்பு, பேச்சிமுத்து, சீனிபாண்டியன், இசக்கிமுத்து, ராமையா ஆகியோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்..
இவர்களை தவிர இன்னும் 3 பேர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டுள்ளார்களாம். அவர்களையும் போலீசார் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு கைதானவர்களிடம் விசாரணை ஆரம்பமானது.. போலீசில் கொலையாளிகள் அளித்துள்ள வாக்குமூலத்தில் சொன்னதாவது:
வாக்குமூலம்: "கொலையுண்ட மணிக்கும். எங்களுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது.. எந்தவிதமான முன் விரோதமும் கிடையாது. 2015ல் நடந்த எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவரின் கொலைக்கு பழிக்கு பழியாக மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில், இவரை கொலை செய்தோம். அவ்வளவுதான்" என்று சொல்லி உள்ளார்கள்..
எந்தவிதமான முன்விரோதமும் இல்லாமல்தான் கொலையை செய்தோம் என்று போலீசாரையே அதிர வைத்துள்ளார்கள் இந்த கொலைகார பாவிகள்..!!












Click it and Unblock the Notifications