துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காலவரையற்ற கடை அடைப்பு போராட்டம்: தூத்துக்குடியில் போலீஸ் குவிப்பு!
துப்பாக்கிச்சூட்டுக்கு எதிராக காலவரையற்ற கடையடைப்பு நடத்த தூத்துக்குடி நகர வர்த்தகர்கள் சங்கம் முடிவுசெய்துள்ளது.
Recommended Video

தூத்துக்குடி : தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் பலியானதை அடுத்து, தகுந்த நியாயம் கிடைக்கும் வரை காலவரையற்ற கடையடைப்புப் போராட்டத்தில் வர்த்தகர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்தி வரும் போராட்டம் நேற்றுடன் 100வது நாளை எட்டியது. இதனையொட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டி பேரணி செல்ல அனுமதி கேட்ட நிலையில், காவல்துறை அனுமதி மறுத்தது.

இந்நிலையில், போலீஸாரின் தடையையும் மீறி நேற்று காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர்.
இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் போலீஸ் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 12 பேர் பலியாகினர். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தகுந்த நியாயம் கிடைக்கும் வரை காலவரையற்ற முழுக்கடையடைப்பு போராட்டத்தில் வர்த்தகர்கள் குதித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications