ஜெ.பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60%க்கு மேல் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.. விளாசிய தினகரன்
ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60%க்கு மேல் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60%க்கு மேல் பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் என டிடிவி தினகரன் சரமாரியாக சாடியுள்ளார்.
ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினரான டிடிவி தினகரன் ஆளும் அதிமுக அரசை சரமாரியாக சாடியுள்ளார். டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது தனியார் பேருந்து உரிமையாளர்ளுக்கு உதவி செய்யவே பேருந்து கட்டண உயர்த்தப்பட்டுள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார். 7.5 கோடி மக்களை விடுத்து சட்டசபை உறுப்பினர்களை கையில் வைத்துக்கொள்ளவே எம்எல்ஏக்களுக்கு சம்பளம் உயர்வு அளிக்கப்பட்டது என்றும் தினகரன் குற்றம்சாட்டினார்.
இரட்டை இலை, கட்சி பெயரை பெற்றுவிட்டதால் தேர்தலில் வென்று விடலாம் என நினைத்தவர்களுக்கு ஆர்கேநகரில் பாடம் புகட்டப்பட்டது என்றும் டிடிவி தினகரன் சாடினார். ஆட்சியை கலைக்க வாக்களித்த ஓபிஎஸ் துணை முதல்வராகியுள்ளார் ஆனால் ஆட்சிக்காக பாடுபட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமல் எம்எல்ஏக்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது ஏன்? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள் 60 %-க்கும் மேல் பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ளனர் என்றும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications