நாங்கெல்லாம் ஜாலியா இப்படித்தான் விளையாடிக்குவோம்.. பதறியடித்த தொட்டியம் ராஜசேகரன்!
தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ரூ.20 டோக்கன் கொடுத்தாக பேசியதாக தினகரனின் ஆதரவாளர் தொட்டியம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தொண்டர்களை உற்சாகப்படுத்தவே ரூ.20 டோக்கன் கொடுத்தாக பேசியதாக தினகரனின் ஆதரவாளர் தொட்டியம் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய தினகரன் அணியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரான தொட்டியம் ராஜசேகரன் பல்வேறு பகீர் தகவல்களை தெரிவித்தார்.
அதாவது ஆர்.கே.நகர் வெற்றிக்காக டோக்கன் விநியோகித்தது மட்டுமின்றி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவையும் தினகரன் தான் வெளியிட சொன்னார் என்றும் ராஜசேகரன் கூறினார்.

ஒரு வழக்குதானே பார்த்துக்கலாம்
மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ சிப்பை தினகரன் வெற்றிவேலிடம் கொடுத்தபோது தான் அங்கிருந்ததாகவும் ராஜசேகரன் கூறினார். ஜெயலலிதா வீடியோவை வெளியிட வெற்றிவேல் தயங்கியபோது ''ஒரு வழக்கு தானே பார்த்துக்கொள்ளலாம்'' என்று தினகரன் கூறியதாகவும் ராஜசேகரன் தெரிவித்தார்.

ராஜசேகரன் விளக்கம்
இது தமிழக அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு தினகரனுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.இந்நிலையில் தான் பேசியது குறித்து தொட்டியம் ராஜசேகரன் விளக்கம் அளித்துள்ளார்.

ரூ.20ஐ நம்பி டோக்கன்
அதாவது ஆர்.கே. நகரில் ரூ. 20 டோக்கன் வழங்கியதாக நான் பேசிய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
6000 கொடுத்தவர்களுக்கு ஓட்டு போடாமல் 20 ரூபாய் டோக்கனை நம்பி மக்கள் ஓட்டுப்போட்டுள்ளார்கள் என்று கூறவே அவ்வாறு பேசியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொண்டர்களை உற்சாகப்படுத்த
மேலும் தினகரன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக்கூறவே அவ்வாறு பேசியதாகவும் ராஜசேகரன் தெரிவித்தார். செயல்வீரர்கள் கூட்டத்தில் தொண்டர்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு பேசினேன் என்றும் தொட்டியம் ராஜசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications