பிறந்த நாள்... அதிகாலையிலேயே ரஜினி வீட்டு முன் குவிந்த ரசிகர்கள் - பொது மக்கள்!
இன்று பிறந்த நாள் காணும் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ரஜினியின் போயஸ் கார்டன் இல்லத்தில் அவரைச் சந்திக்கக் குவிந்தனர்.
ஆனால் அவர் ஊரில் இல்லாததால், அவர் மனைவி லதா அனைவருக்கும் இனிப்பு வழங்கி அனுப்பினார்.
ரஜினியின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் பல்வேறு பகுதிகள், மாநிலங்களிலிருந்தும் சென்னையில் உள்ள அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்து பார்த்துப் போவது வழக்கம்.

ரஜினி சந்திக்கவே இல்லை என்றாலும் கூட, வருவதை இவர்கள் நிறுத்துவதில்லை.
கடந்த இரு ஆண்டுகளாக தனது பிறந்த நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி.
இந்த ஆண்டு லிங்கா வேறு வெளியாவதால், எப்படியும் தங்களைச் சந்திப்பார் என நினைத்து ரஜினி வீட்டுக்கு நிறைய பேர் படையெடுத்து வந்தனர். மலர்க்கொத்துகள், ரஜினி பட பெயிண்டிங்குகள் என பரிசுகளும் கொண்டு வந்தனர்.
ஆனால், ரஜினி அங்கு இல்லை. எனவே காத்திருந்தனர் ரசிகர்கள். பின்னர் வந்தவர்களுக்கு இனிப்பு கொடுத்து அனுப்பி வைத்தார் லதா ரஜினி.












Click it and Unblock the Notifications