For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டுக் காளை அப்பு மரணம்.. பல ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அருகே ஜல்லிக்கட்டுக் காளை ஒன்று மரணமடைந்தது. இதையடுத்து பல ஊர் மக்கள் திரண்டு வந்து அதற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

காளை மாட்டுக்கு மக்கள் கூடி அஞ்சலி செலுத்தியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

மதுரை அருகே சக்குடி கிராமத்தில்தான் இந்த உருக்கமான சம்பவம் நடந்துள்ளது.

ஜல்லிக்கட்டு அப்பு

ஜல்லிக்கட்டு அப்பு

மதுரை அருகே உள்ள சக்குடி கிராமத்தை சேர்ந்த அப்பு என்ற ஜல்லிக்கட்டு காளை தோல்வியே அறியாத காளை என்று கூறப்படுகிறது. பல விருதுகளையும், பதக்கங்களையும், பரிசுகளையும் பெற்றுள்ளது இக்காளை.

மரணம்

மரணம்

தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் என்பவர் தான் இக்காளையின் சொந்தக்காரர். காளை இறந்த செய்தி கேள்விப்பட்டவுடன் சுற்றியுள்ள கிராம மக்கள் அப்புவை கடைசியாக பார்த்துவிட வேண்டும், அப்புவிற்கு இறுதி மரியாதை செலுத்தி விடவேண்டும் என்று பெருந்திரளாக ஒன்றுகூடினர்.

பல்லாயிரம் மக்கள் வேதனை

பல்லாயிரம் மக்கள் வேதனை

ஒரு மனிதர் இறந்தால் கூட இவ்வளவு பெரிய கூட்டம் வருமா என்பது சந்தேகமே. ஆனால் ஒரு ஜல்லிக்கட்டு காளை இறந்தவுடன் பல்லாயிரம் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்கள் இந்த காளையை நேசித்துள்ளனர்.

சீரும் சிறப்பாக வளர்த்து வந்த ராஜசேகர்

சீரும் சிறப்பாக வளர்த்து வந்த ராஜசேகர்

அப்புவின் சொந்தக்காரர் இந்த காளையை சீரும் சிறப்புமாக வளர்த்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மிருகங்களிடமும் மனித நேயம்

மிருகங்களிடமும் மனித நேயம்

பீட்டா போன்ற விலங்குகள் நல அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்தே ஆகவேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து ஜல்லிக்கட்டுக்கு தடையும் வாங்கி உள்ளனர். இந்த தடையின் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் இனி நடைபெறவில்லை என்றால் இந்த அரியவகை காளைகள் நிரந்தரமாக நம் மண்ணைவிட்டு அகன்று போய்விடும் என்பது தான் கவலையான விஷயம்.

தொன்மையான வீர விளையாட்டு

தொன்மையான வீர விளையாட்டு

மேலும் தமிழர்களின் தொன்மையான ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டும் நம் மண்ணை விட்டு நிரந்தரமாக மறைந்துவிடும் என்கின்றனர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையினர்.

அப்புவின் மரணம் கூறும் பாடம்

அப்புவின் மரணம் கூறும் பாடம்

தமிழர்கள் தாங்கள் வளர்க்கும் காளைகளை எந்த அளவிற்கு பராமரித்து அன்புடன் வளர்த்து வந்துள்ளனர் என்பதை அப்புவின் மரணமே நமக்கு காட்டியுள்ளது. அடுத்து வரும் தை மாதத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடையை மீறி நடக்குமா? தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு ஆதரவாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

English summary
Thousands of people thronged to pay homage to Jallikkatu bull Appu near Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X