ஜில்லுன்னு கொட்டும் தண்ணீர்.. குளுகுளு குற்றாலம்.. ஐந்தருவியில் மக்கள் கொண்டாட்டம்
நெல்லை: குற்றாலத்தில் சீசன் களைகட்டத் துவங்கியுள்ளது. ஜில்லுன்னு ஐந்தருவியில் கொட்டும் தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
தமிழக கேரளா எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்கள் சீசன் காலமாகும்.

இக்காலங்களில் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் ஆனந்த குளியல் நடத்த மக்கள் குவிவார்கள். இந்த சீசன் நாட்களில் சுமார் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பாரித்து கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஆனந்தமாக குளித்துச் செல்கின்றனர். ஐந்தருவில் கூட்டம் அதிகமாக உள்ளதால் பெண்கள் பகுதியில் மட்டும் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் எராளமான சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் வாகன நெருக்கடியால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் சிரமம் அடைந்தனர். நாளையும் விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீசன் களைகட்ட துவங்கியுள்ளதால் ஐந்தருவி அருகே உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரி விரைவில் துவங்கப்பட உள்ளது. இதற்கான பணிகளை தமிழ் நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேற்கொண்டு வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications