மதுரையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் - பொதுமக்கள் பீதி!
மதுரை: மதுரையில் பள்ளி ஒன்றிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டதாக போன் வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை காமராஜர் சாலையில் தனியார் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இன்று காலை மதுரை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபர் இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது என்றும், அது சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

இது குறித்து தெப்பக் குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெப்பக்குளம் போலீசார், வெடிகுண்டு கண்டுபிடிப்பு பிரிவு போலீசாருடன் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.
மெட்டல் டிடெக்டர் கருவியுடன் போலீசார் ஒவ்வொரு வகுப்பறைகளாக சென்று சோதனை நடத்தினர். பள்ளி வளாகம் முழுவதும் நடந்த இந்த சோதனையால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
வகுப்புகள் தொடங்கும் முன்பே வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் உடனடியாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வீடு திரும்பினார்கள். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு.. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications