குருவாயூர், தாதர், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் முன்பதிவு பெட்டிகள் இணைப்பு
மதுரை: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க குருவாயூர் - சென்னை, ராமேஸ்வரம் - கன்னியாகுமரி, தாதர் - நெல்லை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களின் இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னைக்கு பகல் நேரத்தில் தினசரி ரயில் (வ.எண். 16128) இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தூத்துக்குடியில் இருந்து வரும் இணைப்பு ரயிலும் (வ.எண். 16130) இணைக்கப்படுகிறது.
குருவாயூரில் இருந்து வரும் ரயிலில் 5 பொது பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளும், 4 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டிகளும், 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க அந்த ரயிலில் இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
குருவாயூர் எக்ஸ்பிரஸ்
குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் (வ.எண். 16127, 16128) இரு மார்க்கங்களிலும் கூடுதல் பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி வருகிற 2-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 1-ந்தேதி வரை ஒரு 2-ம் வகுப்பு தூங்கும் வசதி முன்பதிவு பெட்டியும், ஒரு 2-ம் வகுப்பு உட்காரும் வசதி கொண்ட முன்பதிவு பெட்டியும் இணைக்கப்படும்.
ராமேஸ்வரம் - கன்னியாகுமரி
ரயில் எண் 22621.22688 ராமேஸ்வரம் - கன்னியாகுமரி - ராமேஸ்வரம் வாரம் மூன்றுநாள் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட உள்ளது. ஜனவரி 31ஆம் தேதி ராமேஸ்வரத்திலும், பிப்ரவரி 1ஆம் தேதி கன்னியாகுமரியிலும் கூடுதல் பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட உள்ளன.
தாதர் எக்ஸ்பிரஸ்
ரயில் எண் 22630/22629 திருநெல்வேலி - தாதர் - திருநெல்வேலி வாராந்திரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மூன்றடுக்கு ஏசி முன்பதிவு பெட்டி பிப்ரவரி 4ஆம் தேதி முதல் கூடுதலாக இணைக்கப்படுகிறது. தாதரில் இருந்து பிப்ரவரி 6ஆம் தேதி முதல் கூடுதல் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
பழனி - சென்ட்ரல்
பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, சென்னை சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் ரயிலில், தற்காலிகமாக கூடுதல், 'ஏசி' பெட்டி இணைக்கப்படுகிறது. பிப்ரவரி, 1 முதல் மார்ச், 30ம் தேதி வரை, சென்னை சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் ரயிலில், இரு மார்க்கங்களிலும், கூடுதலாக, முதல் வகுப்பு, 'ஏசி' வசதி பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications