நாகை அருகே சுவர் இடிந்து விழுந்து 3 பேர் மரணம் : உயிர் பிழைத்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருவாவடுதுறை கிராமத்தில் சுவர் இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.
திருவாவடுதுறையை சேர்ந்த கட்டுமானப் பணியாளர் வெங்கட்ராமன் அவரது மனைவி மற்றும் இரண்டு மகள்களும் நேற்றிரவு வீட்டில் துங்கியிருக்கின்றனர். மழையில் நனைந்திருந்த வீட்டின் சுவர் இன்று அதிகாலை இடிந்து விழுந்து அமுக்கியது. இதில் அனைவரும் புதையுண்டனர். சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் இடிபாடுகளை அகற்றினர்.

இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த வெங்கட்ராமன், அவரது மனைவி கார்த்திகா மறறும் இளையமகள் சாகித்யா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட மூத்த மகள் வர்ஷினி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. சம்பவம் குறித்து குத்தாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications