ஜெ.வின் கொடநாடு பங்களா கொள்ளை: கேரளாவில் மேலும் 3 பேர் கைது!
ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கொள்ளை தொடர்ந்தது தொடர்பாக மேலும் மூன்று பேர் கேரளாவில் போலீசிடம் சிக்கியுள்ளனர்.
கோவை: ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொள்ளை,கொலை தொடர்பாக கேரள மாநிலத்தில் மேலும் 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை கொடநாடு எஸ்டேட்டுக்கு பயணம் மேற்கொள்வார். சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை சென்று அங்கிருந்து ஹெலிஹாப்டர் அல்லது கார் மூலம் நீலகிரியிலுள்ள கொடநாட்டிற்குச் செல்வார்.

கொடநாட்டிலிருந்தே தனது அரசியல் மற்றும் அரசு பணிகளை ஜெயலலிதா மேற்கொள்வார். அதனால் தமிழக அரசு அதிகாரிகள் மத்தியில் அப்போதெல்லாம் 'கொடநாடு கேம்ப் அலுவலகம்' என்ற வார்த்தை மிகுந்த பிரபலமான ஒன்று.
ஜெயலலிதா அங்கு இருந்தபோதும் அதற்குப் பிறகு சென்னைக்கு அவர் திரும்பியபோதும் கொடநாடு மிகுந்த போலீஸ் பாதுகாப்போடு இருக்கும். ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு கொடநாட்டில் போலீஸ் பாதுகாப்பு முற்றிலும் இல்லாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில்தான் கடந்த மாதம் 24ந் தேதி கொடநாடு எஸ்டேட்டில் கொலையும் கொள்ளையும் நடந்துள்ளது. அதுதொடர்பாக இன்று கேரள மாநிலத்தில் ஜாய், ஜெம்சீர் அலி, அமீஷ் அனுப் ஆகியோர் சிக்கினர்.
இவர்களிடம் போலீசார் மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications