திருப்பூரில் அனுமதியின்றி தங்கியிருந்த 3 நைஜீரியர்கள் வெளியேற்றம்: தமிழக அரசு அதிரடி
சென்னை: அனுமதியின்றி தமிழகத்தில் தங்கியிருந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 3 பேர் இன்று சொந்த நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியாவைச் சேர்ந்த பலர் கல்வி, வேலை அல்லது சுற்றுலா விசா பெற்று இந்தியாவுக்கு வருகின்றனர்.
இங்கு வந்த பின்னர் ஆன்லைன் மோசடி, போதைப்பொருள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு நமது நாட்டினரையே ஏமாற்றி, ஏராளமான பணம் சம்பாதிக்கும் இவர்கள் விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவை விட்டு வெளியேறாமல் கள்ளத்தனமாக இங்கேயே இருந்து வருகின்றனர்.
நைஜீரியா நாட்டை சேர்ந்தவர்கள் ஒலோடடோ ஒபோசாடோ என்ற ரிச்சர்டு, டிக்சன், ஒபியோடுன் என்ற ஜெர்ரி. இருபது வயதை கடந்த இவர்கள் பட்டப்படிப்பு படிப்பதற்காக கடந்த சில வருடங்களுக்கு முன் இந்தியா வந்தனர்.
திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்த அவர்கள், தங்கி இருந்த வீட்டின் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களுடன் சண்டை சச்சரவுகளிலும், வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து அவர்களை "கியூ' பிரிவு போலீசார் கைது செய்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யூரில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைத்தனர். அவர்கள் விசா காலத்திற்கும் அதிகமாக தங்கி இருந்ததால், மூவரையும் அவர்களது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
தமிழக அரசின் உத்தரவினையடுத்து, இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் வழியாக நைஜீரியாவுக்கு செல்லும் விமானத்தில் அவர்கள் மூவரும் ஏற்றி அனுப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications