கடலூர் அருகே மாயமான 3 மாணவர்கள் ஆற்றில் சடலமாக மீட்பு
பண்ருட்டி அருகே மாயமான பள்ளி மணவர்கள் 3 பேர் திருவதிகை அணைக்கட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
கடலூர்: பண்ருட்டி அருகே மாயமான பள்ளி மணவர்கள் 3 பேர் திருவதிகை அணைக்கட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.
பண்ருட்டி லிங்க் ரோட்டில் பிரகாஷ் என்பவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவரது 15 வயது மகன் திவாகரனும் பண்ருட்டி பஸ் நிலையம் எதிரில் சலூன் கடை வைத்திருக்கும் வெங்கடேசன் என்பவரின் மகன் ஹரி ஆகிய இருவரும் பண்ருட்டி லிங்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் நேற்று மற்றொரு மாணவனுடன் குளிப்பதற்காக அருகில் உள்ள திருவதிகை அணைகட்டு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கு கரையில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்ணீரில் இறங்கி குளித்துள்ளனர்.
அப்போது அணையில் இருந்த புதைக்குழியில் சிக்கி மூன்று மாணவர்களும் மூழ்கினர். இரவு நீண்ட நேரமாகியும் பிள்ளைகள் திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அணைப்பகுதியில் சென்று பார்த்தனர்.
அப்போது மாணவர்களின் மோட்டார் சைக்கிளும் சட்டையும் இருப்பதைக்கண்ட பெற்றோர் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூன்று மாணவர்களின் உடல்களையும் மீட்டனர்.
மூவரின் உடலும் பிரேத பரிசோதணைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளில் குளிக்க சென்ற மாணவர்கள் அணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications