மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 மாணவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பதற்றம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் 3 மாணவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு நிலவி வருகிறது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமுக்கம் மைதானத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி 5000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களில் மூவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்க்ள போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Three students tried to set fire them self in Madurai

ஜல்லிக்கட்டுக்காக காலை முதலே மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த மக்களும் அங்கு திரண்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களில் 3 பேர் தீக்குளிக்க முயன்றனர்.

இதையடுத்து மாணவர்களின் மீது சக மாணவர்கள் தண்ணீரை ஊற்றி அவர்களை சமாதானப் படுத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+