சென்னையில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை : சென்னை வடபழனியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் சமீபகாலமாக போதைப்பொருள் விற்பனை அதிகரித்து உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கஞ்சா விற்பனை செய்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Three Students were arrested for having illegal drugs

இந்நிலையில், வடபழனி பகுதியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Three Students were arrested for having illegal drugs. Those three students were arrested on Vadapalani area and in the short span many arrested for selling illegal drugs in chennai.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற