சர்க்கரை நோயாளியான ஜெ.வுக்கு ஒரே நாளில் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா.. அப்பல்லோ பட்டியலில் அம்பலம்
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகியவை கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகியவை கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு பலனின்றி அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.

வக்கீல் குறுக்கு விசாரணை
விசாரணை கமிஷன் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவர்கள், சசிகலா குடும்பத்தினர், ஜெயலலிதாவின் உதவியாளர்கள் உள்ளிட்டோருடன் விசாரணை நடத்தி வருகின்றது. அவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

சர்க்கரை நோயாளிக்கு ஸ்வீட்
இந்த நிலையில் சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு ஒரே நாளில் 3 வகை இனிப்புகள், அவ்வப்போது பழச்சாறுடன் கூடிய மில்க் ஷேக் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா
ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பலோ மருத்துவமனை நிர்வாகம் தாக்கல் செய்த உணவு பட்டியல் மூலம் இது தெரியவந்துள்ளது. 2016 நவம்பர் 22 ஆம் தேதி மதியம் லட்டு, குலோப் ஜாமூன், ரசகுல்லா ஆகிய இனிப்பு பலகாரங்களை உட்கொண்டதும் தெரியவந்தது.

வாழைப்பழம், மில்க் ஷேக்
2016 டிசம்பர் 2, 3 ஆம் தேதிகளில் ஆப்பிள், ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் மில்க் ஷேக் வகைகளை ஜெயலலிதா உட்கொண்டார் என அறிக்கையில் தகவல் கூறப்பட்டு உள்ளது.

இனிப்புகள் - அதிர்ச்சி
சர்க்கரை நோயாளியான ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதே ஒரே நாளில் மூன்று இனிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு தொடர்ந்து மில்க்ஷேக்களும் கொடுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications