வீடு கொடுக்க மறுப்பு... வீட்டை அடித்து நொறுக்கிய மூன்று பெண்கள்!
வீடு கொடுக்க மறுத்ததால், வீட்டு உரிமையாளர் கண்முன்னே மூன்று பெண்கள் சேர்ந்து வீட்டை அடித்து நொறுக்கினர்.
சென்னை: கோவூர் சாரதா நகரில் வீட்டு உரிமையாளர், வாடகைக்கு வீடு தர மறுத்ததால் மூன்று பெணகள் வீட்டை அடித்து நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.
கோவூர் சாரதா நகரில் வசிப்பவர் சுரேஷ்ராஜன். இவரிடம் மூன்று பெண்கள் மசாஜ் பார்லர் நடத்த வீடு கேட்டு வந்துள்ளனர். இவர் தன் வீட்டை வாடகைக்கு தர முடியாது என கூறியுள்ளார். இதுகுறித்து சுரேஷ் ராஜனுக்கும் வாடகைக்கு வீடு கேட்டு வந்த பெண்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த தகராறிலும் அவர் வீடு தர மறுத்ததால், ஆத்திரமடைந்த மூன்று பெண்கள் வீட்டின் மீது கல்லை வீசி எறிந்து துவம்சம் செய்தனர். அதோடு நில்லாமல் உருட்டுக் கட்டைகளைக் கொண்டு வீட்டின் முன் இருந்த காரை அடித்து நொறுக்கினர். அக்கம்பக்கத்தினர் இதனை வேடிக்கை பார்த்தார்களே ஒழிய யாரும் வந்து தடுக்கவில்லை.
இதனால் சுரேஷ்ராஜன் போலீசாருக்கு தொலைபேசி மூலம் புகார் கொடுத்தார். ஆனால், அப்பெண்கள் வீட்டை அடித்து நொறுக்கி முடித்துச் சென்றபின்பே போலீசார் வந்தனர் என சுரேஷ்ராஜன் வருத்தத்துடன் தெரிவித்தார்.
மூன்று பெண்கள் தெருவில் இறங்கி கட்டைகளையும் கற்களையும் கொண்டு வீட்டை அடித்து நொறுக்கியதைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications