கோவில்பட்டியில் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவ திரில் ஷோ
கோவில்பட்டி: கோவில்பட்டியில் மாற்றுத் திறனாளிகள், இளைஞர்களின் திரில் ஷோ நிகழ்ச்சி நடந்தது.
கோவில்பட்டி மந்திதோப்பு ரோடு சர்க்கஸ் மைதானத்தில் நெல்லை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை, கோவில்பட்டி ஆஸ்கர்- வி.வி.ஜே. கல்வி நிறுவனங்கள் சார்பில், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்களின் திரில் ஷா நிகழ்ச்சி நடந்தது.
உலகத்தில் இறைவன் படைப்பில் மனிதன் பிறப்பில் சில குறைபாடுகளுடன் பிறக்கிறான். குறைபாடுயுடன் பிறக்கின்ற குழந்தைகள் மற்ற குழந்தைகளை போல நம்மாலும் செயல்பட முடியாமல் உள்ளது என்று ஏக்கககளுடன் வாழ்கின்றன.
சிலருக்கு கை கால்,கண் மற்றும் காது உள்ளிட்ட மனித உறுப்புக்கள் குறைபாடுகளுடன் இருப்பவர்கள் செயற்கையாக செய்யப்பட்ட மனித உறுப்புகளை பயன்படுத்தி மற்றவர்களை போல நாமும் செயல்படமுடியும் என்ற தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் பல தடைகளை தகாந்தெறிந்து வெற்றிகளை பெற்றவர்களும் இவ்வுலகில் உள்ளார்கள்.

ஆனால் பிறப்பிலேயே இரண்டு கைகள் கால்கள் ஊணமாக பிறக்கின்ற குழந்தைகள் பிறர் உதவியுடன் தாங்களது அன்றா காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களுக்காக சழுதாயத்தில் நல்ல உள்ளம் படைத்தவர்களும் தாங்களால் முடிந்த உதவிகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருகே ஓரு கிராமத்தில் பிறந்த குழந்தை இரண்டு கைகள் மற்றும் கால்கள் சுருங்கியுள்ளது. அவரது குடும்பம் வறுமைகோட்டிற்கு உள்ளது. ஆரம்ப காலங்களில் இவரது தந்தை பல மருத்துவர்களிடம் தனது குழந்தையை காண்பித்து மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள்.
இன்று குழந்தை 27வயது பெண்னாக இருந்தாலும் பார்ப்பதற்கு 5 மாத குழந்தை தரையில் படுத்து இருந்த எப்படி இருக்குமோ அதை போன்ற உள்ளது. இந்த குழந்தையை கடந்த 28வருடங்களாக அவரது குடும்பத்தினர் பல்வேறு சிரமங்களுக்கிடையே பாதுகாத்து வருகின்றனர்.

இந்த பெண்னுக்கு உதவுவதற்காக நல்ல உள்ளங்கள் படைத்த நெல்லை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை மற்றும் கோவில்பட்டி உள்ள வி.வி.ஏ கல்வி நிறுவனங்கள் இனைத்து அந்த பெண்னுக்கு உதவும் வகையில் சமுதாயத்தில் உயர்ந்த உள்ளம் படைந்த தொழிலதிபர்களுடன் உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில் கோவில்பட்டியில் திரில் ஷோ என்ற கலை நிகழ்ச்சியை நடத்தி அதன் முலம் வருகின்ற நிதியை அவர்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படுகிறது என்பது மிகப் பெருமை உள்ளது.
இது போன்ற நம் சமுதாயத்தில் நல்ல உள்ளமும் கருனை கொண்ட பெரியோர்கள், அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள் உள்ளார்கள். அவர்களும் தாங்களால் முடிந்த பொருள் உதவியை அளிக்க முன்வரவேண்டும். கோவில்பட்டியில் நடைபெற்ற திரில ஷோ நிகழ்ச்சிக்கு ஆஸ்கர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுப்புராஜ் தலைமை வகித்தார். தொழில் அதிபர் பெரியசாமி பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜீ திரில் ஷோ நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாற்றுத் திறனாளி வாலிபர் ஒருவர், ஒற்றைக் காலுடன் நடனமாடிய காட்சி, மற்றொரு வாலிபர் டியூப் லைட்டுகளை உடைத்து தின்ற காட்சி பார்வையாளர்களை வியக்க வைத்தது.
மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் இணைந்து பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நடத்தினர். மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர்.செ.ராஜீ ரூ.5 ஆயிரமும், முன்னாள் நகர செயலாளர் விஜய பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் ரூ.5 ஆயிரமும் ஜானகி அம்மாள் அறக்கட்டளை சார்பில் நிதி வழங்கினர்.

கடந்த ஆண்டு கோவில்பட்டியில் நடந்த சாகச நிகழ்ச்சியில், கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளியான திருமங்கலம் கப்பலூரைச் சேர்ந்த ராஜா மகள் ஐஸ்வர்யாவின் சிகிச்சைக்காக நிதி வழங்கப்பட்டது. அவர் கண் பார்வை பெற்ற நிலையில், தனக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறினார்.
ஐஸ்வர்யாவின் உயர் கல்வி செலவை ஆஸ்கர் கல்வி நிறுவனம் ஏற்பதாக தாளாளர் சுப்புராஜ் தெரிவித்தார். உடல் வளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளியான திருமங்கலம் சாத்தன்குடியைச் சேர்ந்த தெய்வகுரு மகள் பிரேமலதாவின் (வயது 27) சிகிச்சைக்காக ரூ.10 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் பலரும் மாற்றுத்
திறனாளிகளின் சிகிச்சைக்காக நிதி வழங்கினர்.
ரோட்டரி சங்க மண்டல தலைவர் விநாயகா ரமேஷ், மைக்ரோ பாய்ண்ட் ஐ.டி.ஐ. தாளாளர் ஆம்ஸ்ட்ராங், சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழக தலைவர் சுரேஷ் குமார், ரோட்டரி சங்க தலைவர் வீராசாமி, செயலாளர் ஜெயபிரகாஷ், நாராயணசாமி,ஜானகி அம்மாள் அறகட்டளை நிருவனர் ராஜசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
நிகழ்ச்சியை அலெக்ஸ் கைலாசம் அறக்கட்டளை வின்சென்ட், ஆஸ்கர் கேட்ரிங் முதல்வர் அழகுமணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications