செக் மோசடி வழக்கு.. "பவர் ஸ்டார்" சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் .. மறுபடியும் ஜெயிலா??
செக் மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு துறையூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
துறையூர்: செக் மோசடி வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாததால், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து துறையூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சேர்ந்தவர் வரதராஜன். ரியல் எஸ்டேட் தொழில் அதிபர். இவருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கி தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறினார். இதற்கு ரூ.60 லட்சம் கமிஷன் பேசி, ரூ.30 லட்சத்தை 6 மாதங்களுக்கு முன் வரதராஜன் கொடுத்திருந்தார். ஆனால் சொன்னபடி கடன் வாங்கித் தரவில்லை.

இதையடுத்து ரூ.30 லட்சத்தை சீனிவாசன் திருப்பிக்கொடுத்தார். மீதி 30 லட்சத்துக்கு செக் கொடுத்திருந்தார். அந்த செக் வங்கியில் பணம் இல்லாமல் பவுன்சாகி திரும்பி விட்டது. பின்னர் வரதராஜன் துறையூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு துறையூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சீனிவாசனுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு நீதிபதி பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார்.
இதே வழக்கில் ஏற்கெனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பவர் ஸ்டார் வெளியே வந்து சில படங்களில் நடித்தார். இதையடுத்து செக் மோசடி வழக்கை வரதாஜன் மீண்டும் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications