திருச்செந்தூர் கோவில் யானை குமரன் உடல்நலக் குறைவால் மரணம் – கோவிலிலேயே அடக்கம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் ஆண் யானை குமரன் இன்று காலை உடல்நலக்குறைவால் தூக்கத்திலேயே மரணமடைந்தது அப்பகுதி மக்களையும், பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 13 வயதான குமரன் என்ற ஆண் யானையும், தெய்வானை என்ற பெண் யானையும் உள்ளது. இந்த யானைகள் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதோடு, திருவிழா நாட்களில் பங்கேற்று வந்தன.

கடந்த சில நாட்களாக ஆண் யானை குமரன் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமுக்கு செல்லவில்லை.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குமரன் யானைக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மும்பையில் இருந்து கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும் சோர்வுடன் இருந்து வந்த யானை இன்று அதிகாலை திடீரென இறந்தது.

இது குறித்து கோவில் இணை ஆணையர் ஞானசேகரனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் யானையின் உடலுக்கு மாலைகள் அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இறந்த யானையின் உடல் இன்று கோவில் வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படவுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications