For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி திமுக மாநாடு: ராமஜெயம் இல்லையே… கண் கலங்கும் கே.என்.நேரு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Tiruchi DMK conference : A90-feet flag mast named K N Nehru's brother Ramajayam.
திருச்சி: திருச்சியில் திமுக-வின் 10-வது மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

திமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்டச் செயலாளருமான கே.என். நேரு மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்தமுறை திமுக மாநாடுகள் திருச்சியில் நடைபெற்ற போது அவரது தம்பி ராமஜெயம் உடனிருந்தார். இந்த முறை தம்பியை இழந்து தனி ஆளாய் மாநாட்டு பணிகளை சிறப்பாக செய்துள்ளாராம் கே.என்.நேரு.

மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரை, மாநாட்டுச் செலவுகள் ரூ.13 கோடியை தாண்டிவிட்டதாம். மாநாட்டில் இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

250 ஏக்கரில் பிரம்மாண்டம்

திருச்சி பிராட்டியூர் பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 1100 அடி நீளம், 600 அடி அகலத்தில் மாநாட்டுப் பந்தல், 200 அடி நீளம், 80 அடி அகலத்தில் மாநாட்டு மேடை, மாநாட்டு நிகழ்வை கடைசியிலுள்ளவர்களும் காணும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எல்.சி.டி.டிவிகள், வைக்கப்பட்டுள்ளன.

கே.என். நேருவின் தம்பி

1996 மற்றும் 2006-ல் திருச்சியில் திமுக-வின் 8 மற்றும் 9-வதுமாநில மாநாடுகள் நடைபெற்றன. அப்போது, நேருவின் நிஜ பிம்பமாகவும் அவரின் தளபதியாகவும் செயல்பட்டு வந்த அவரது தம்பி ராமஜெயம் மாநாட்டு ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று கவனித்துக் கொண்டார்.

ராமஜெயம்

1996 கொட்டப்பட்டிலும் 2006-ல் செம்பட்டிலும் திமுக மாநாடுகள் நடைபெற்றன. மாநாடு அறிவிக் கப்பட்டதுமே, புதர் மண்டிக்கிடந்த அந்த இடங்களை ராமஜெயம் தனி ஆளாகவே முன்னின்று புல்டோசர் வைத்து சுத்தம் செய்து மாநாட்டுத் திடலை தயார் செய்தாராம்

ராமஜெயம் இல்லையே

அந்த நேரங்களில் கே.என்.நேரு அவ்வப்போது வந்து ஆலோசனைகளை சொல்லி விட்டுப் போவார். அண்ணனுக்காக அத்தனையையும் இழுத்துப் போட்டுச் செய்தார் ராமஜெயம். இந்த மாநாட்டில் ராமஜெயம் இல்லாதது நேருவுக்கு மாத்திரமல்ல.. கட்சி யினர் அனைவருக்குமே பெரும் இழப்புதான் என்கின்றனர் திமுக வினர்.

நேரு கலக்கம்

10 வது திமுக மாநாட்டில் ராமஜெயம் இல்லாமன் போனதன் தாக்கமும் வாட்டமும் நேருவின் முகத்தில் நன்றாகவே தெரிகிறது. ஒவ்வொன்றையும் செய்துவிட்டு கண் கலங்கிப் போய் பார்க்கிறாராம் நேரு.

நேருவுக்கு வருத்தம்

மாநாட்டு வரவேற்பு வளைவுகளுக்கு மறைந்த திமுக நிர்வாகிகள் பெயர்கள் சூட்டப்பட் டுள்ளன. அதில் ஒரு வளைவுக்கு ராமஜெயத்தின் பெயரை வைக்க வேண்டுமென நேரு ஆதரவாளர்கள் கேட்டதற்கு தலைமையிடமிருந்து சரியான பதில் இல்லையாம். இதில்கூட நேருவுக்கு சற்று வருத்தம்தான் என்கின்றனர்.

ராமஜெயம் கொடிக்கம்பம்

இதைப் புரிந்து கொண்டுதான், மாநாட்டு திடலின் முகப்பில் 90 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டு அதனடியில் ராமஜெயத்தின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருமுறையும் அந்த கொடிக்கம்பத்தை அண்ணாந்து பார்த்து கலங்கி நிற்கிறாராம் கே.என். நேரு.

English summary
The highlight of the DMK meet is the announcement that the venue may be soon be converted into Periyar Nagar that would house a row of modern apartments with a 90-feet flag mast named after K N Nehru's brother Ramajayam. The mast would be inaugurated after a flag hoisting ceremony by Karunanidhi on February 15.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X