மக்கள் நலக்கூட்டணிக்கு வாங்க... நாங்க 'கிங்' ஆக்குறோம்... கேப்டனை அழைக்கும் திருமா
சென்னை: மக்கள் நலக் கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் அவரை‘கிங்' ஆக்குவது பற்றி பரிசீலிப்போம் என்று அக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.
தேமுதிக அரசியல் திருப்புமுனை மாநாடு, காஞ்சிபுரம் வேடலில் சனிக்கிழமை நடைபெற்றது இதில் விஜயகாந்த் நான் ‘கிங்' ஆக வேண்டுமா அல்லது ‘கிங் மேக்கராக' வேண்டுமா என தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார். அவர் ‘கிங்' ஆக இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் கூறினர்.

இதனால், தேமுதிக தலைமையில் புதிய கூட்டணி அமையலாம் என்று கூறப்பட்டது.
விஜயகாந்தை கூட்டணிக்கு வருமாறு திமுக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு பதில் காஞ்சிபுரம் மாநாட்டில் கிடைக்கும் என்று கூறப்பட்ட நிலையில் விஜயகாந்தின் கிங் பேச்சும் பிரேமலதா விஜயகாந்தின் திமுக விமர்சனமும் தொண்டர்களிடையே ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், விஜயகாந்த் பேச்சுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். தேமுதிக மாநாட்டில் திமுக, அதிமுகவை பிரேமலதா விமர்சித்துள்ளார். இதன்மூலம், அந்த மாநாட்டில் ஒரு விஷயத்தை தேமுதிகவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
விஜயகாந்தை ‘கிங்' ஆக்க வேண்டும் அதாவது, அவரை முதல்வராக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் எண்ணமாக உள்ளது.
திமுகவும், அதிமுகவும் அவரை முதல்வராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மீதமிருப்பது இரண்டே வழிதான். ஒன்று பாஜக, மற்றொன்று மக்கள் நலக் கூட்டணி.
அதிமுகவுடன் பாஜக காட்டும் நெருக்கம், விஜயகாந்துக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்ற சூழல்தான் இப்போது உள்ளது. எனவே, மக்கள் நலக் கூட்டணிக்கு அவர் வந்தால், அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்குவது பற்றி நாங்கள் 4 கட்சித் தலைவர்களும் பேசி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளார்.
விஜயகாந்தின் கிங் பேச்சுக்கு பாஜக தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியும், திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்றே நம்பிக்கொண்டிருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications